Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (15:24 IST)
கள்ளர் சீரமைப்பு துறைக்கு உட்பட்ட பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி கா‌லி‌யிட‌ங்களு‌ க்கு பதிவு மூப்பு அடிப்படையில் ஆ‌சி‌ரிய‌‌ர்க‌ள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது தொடர்பாக தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்த ி‌க ்குறிப்பில ், " மதுரை மாவட்ட வருவாய் அலுவலரால் (கள்ளர் சீரமைப்பு) அறிவிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பணி காலியிடங்களுக்கு தகுதியான பதிவு தாரர்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பரிந்துரைக்க உத்தேச பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த பணிக்கு மேல்நிலை கல்வி தேர்ச்சியுடன் இடைநிலை ஆசிரியர் பட்டய படிப்பு தேர்ச்ச ி‌ப் பெற்றவர்களில் பிரமலை கள்ளர் சமுதாயத்தினர் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு வயது வரம்பு இல்லை. பிரமலை கள்ளர் வகுப்பினரில் பொது பிரிவினருக்கு 27.2.2006 வரை பதிவு செய்தவர்களும், முன்னுரிமை அற்றோர் பெண்கள் பிரிவினரில் 11.10.2004 வரை பதிவு செய்தவர்கள் முன்னுரிமை உடையோர் பெண்கள் பிரிவினரில் 31.10.2008 வரை பதிவு செய்தவர்களும் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட பதிவு மூப்புக்குள் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் வருகிற 26 ஆ‌ம ் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பரிந்துரையை உறுதி படுத்த ி‌க் கொள்ளலாம ்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments