Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் டிச.18 முதல் ராணுவத்திற்கு ஆள் சே‌ர்‌ப்பு!

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (15:20 IST)
ராணுவ‌த்‌தி‌ல் தொழில்நுட்ப பிரிவு வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாம ் வேலூரில் டிச‌ம்ப‌ர் 18 முதல் 21ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவு வேலைகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் வேலூர் கோட்டையில் உள்ள காவல‌் பயிற்சி பள்ளியில் 18ஆ‌ம் தேதி தொடங்கி 21ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

பிளஸ்-2 படி‌ப்‌பி‌ல் அறிவியல் பாடங்களையும் கணிதத்தையும் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 40 ‌விழு‌க்காடு மதிப்பெண் அவசியம். வயது 23-க்குள் இருக்க வேண்டும். 165 செ.மீ. உயரம் தேவை. மார்பளவு குறைந்தபட்சம் 77-82 செ.மீ. என்ற அளவில் விரிவடைய வேண்டும்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 18ஆ‌ம் தேதி அன்றும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 20ஆ‌ம் தேதி அன்றும் வர வேண்டும். அதிகாலை 5.30 மணிக்கே முகாம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட வேண்டும ்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments