Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎ‌ன்‌பி‌எ‌ஸ்‌சி குரூ‌ப் 1 : டிச.26 முத‌ல் நே‌ர்முக‌த் தே‌ர்வு!

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (16:41 IST)
த‌மி‌ழ்நாடு அரசு‌ப் ப‌ணியாள‌ர் தே‌ர்வாணை‌யத்தா‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட 172 அரசுப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 26ஆ‌ம் தே‌தி முத‌ல் அடு‌த்த ஆ‌ண்டு ஜனவ‌ரி 3ஆ‌ம் தே‌தி வரை நடைபெறு‌கிறத ு.

துணை ஆட்சியர், போலீஸ் துணை கண்காணிப்பாளர் (தரம் 1), வணிக வரி அலுவலர், கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சி மற்றும் நேர்முக உதவியாளர்-வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு கோட்ட அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான 172 காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளத ு.

இத‌ற்கான முத‌ன்மை‌த் தே‌ர்‌வு கட‌ந்த ஆக‌ஸ்‌ட் மாத‌ம் 16, 17ஆ‌ம் தே‌திக‌ளி‌ல் நடைபெ‌ற்றது. முத‌ன்மை‌த் தே‌ர்‌வி‌ல் வெ‌ற்‌றி‌ப் பெ‌ற்றவ‌ர்க‌‌ளி‌ன் பெய‌ர் ப‌ட்டிய‌ல் தே‌ர்வாணைய‌த்‌தி‌‌ன் இணையதளமான www.tnpsc.gov.in எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. எழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர ்.

முத‌ன்மை‌த் தே‌‌ர்‌வி‌ல் வெ‌‌ற்‌றி பெ‌ற்றவ‌ர்களு‌க்கான நேர்காணல் (வாய்மொழித் தேர்வு) சென்னை அ‌ண்ணா சாலை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ள ஓம‌ந்தூரா‌ர் தோ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் டிசம்பர் 26, 29, 30, 31, ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறு‌கிறது.

நேர்காணல் நடைபெறும் நாள், நேரம் குறித்த விவரம் ஒரு‌வ்வொருவரு‌க்கு‌ம் த‌னி‌த்த‌னியாக அனு‌ப்ப‌ப்பட்டு‌ள்ளது. நே‌ர்முக‌த் தே‌ர்வு‌க்கு வருபவ‌ர்க‌ள் அனை‌த்து‌ச் சா‌ன்‌றித‌ழ்க‌ளுட‌ன் கல‌ந்து கொ‌ள்ளவே‌ண்டு‌ம். மேலு‌ம் ‌விவர‌‌ங்களு‌க்கு தே‌ர்வாணைய‌த்‌தி‌ன் இணைய தள‌த்‌தி‌ல் தெ‌ரி‌‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments