Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் ராணுவ‌த்து‌க்கு ஆ‌ள் சே‌ர்‌ப்பு!

Webdunia
சனி, 6 டிசம்பர் 2008 (15:24 IST)
ராணுவ‌த்‌தி‌ல் சோல்ஜர் டெக்னிக்கல் பதவிக்க ு, வேலூ‌‌ரி‌ல ் வரு‌ம் 18ஆ‌ம் தே‌தி முத‌ல் ஆள் சேர்ப்பு முகா‌ம் நடைபெற உள்ளத ு.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வெளியிட்டுள் ள செய்திக்குறிப்பில ், " விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை மற்றும் புதுச்சேரி ய ூனியன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சோல்ஜர் டெக்னிக்கல் பதவிக்கு ராணுவத்தில் சேர்ந்திட ஆள்சேர்ப்பு வருகிற 18 ஆ‌ம ் தேதி வேலூரில் நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 20 ஆ‌ம ் தேதி ஆள்சேர்ப்பு நடைபெறும். இந்த பதவிக்கு மேல்நிலைப்பள்ளி கல்வி படிப்பில் விஞ்ஞான பிரிவில் இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், கணிதம் படித்து மொத்தத்தில் குறைந்தது 40 ‌ விழு‌க்காடு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

17 1 /2 வயது முதல் 23 வயது வரையிலும், உயரம் 165 செ.மீ, 77 செ.மீ மார்பளவும், 5 செ.மீ விரிவடைதலும் உள்ளவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்.

தகுதியுடையவர்கள் கல்வித்தகுதி சான்றுகள், குடியுரிமை சான்று, சாதிச்சான்று, பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்று, பயிலகத்தில் படிப்போர் பயிற்சி சான்று, என்.சி.சி., விளையாட்டு சான்று, ராணுவத்தில் பணிபுரிவோரின் மகன் எனில் படைப்பிரிவு அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சார்ந்தோர் சான்று, முன்னாள் படைவீரர் மகன் எனில் முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர், உதவி இயக்குனரிடமிருந்து பெறப் பட்ட சான்று மற்றும் ஆவண காப்பக பகுதி-2 ஆணை சான்று, பயிலக நடத்தைச்சான்று, பஞ்சாயத்து செயலாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட நடத்தைச்சான்று, அண்மையில் எடுக்கப்பட்ட 10 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகிய சான்றுகளுடன் உரிய தேதிகளில் அன்று காலை 5.30 மணிக்குள்ளாக ஆஜராக வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments