Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓம‌ன் நா‌ட்டி‌ல் வேலை‌க்கு இ‌ன்று நே‌ர்முக‌த் தே‌ர்வு!

Webdunia
சனி, 6 டிசம்பர் 2008 (12:19 IST)
ஓம‌ன் நா‌ட்டி‌ல் கொ‌‌த்தனா‌‌‌ர்க‌ள், க‌ம்‌பி வளை‌ப்பவ‌ர்க‌ள் உ‌ள்பட ப‌ல்வேறு க‌ட்டுமான‌ப் ப‌ணி வேலை‌க்கு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக டிச‌ம்ப‌ர் 6 ம‌ற்று‌ம் 7ஆ‌ம் தே‌திக‌ளி‌ல் நே‌ர்முக‌த் தே‌ர்வு நடைபெற இரு‌க்‌கிறது.

இது தொட‌ர்பாக அ‌ரியலூ‌ர் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் வெ‌ளி‌யிட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், " ஓமன்நாட்டிற்கு கட்டுமானப்பணிகளான கொத்தனார்கள் (டைல்ஸ் மார்பிள்,செங்கல் பிளாஸ்டரிங்) சென்டரிங் கார்பெண்டர்கள், பார்பென்டர்கள் மற்றும் ஸ்டீல் பிட்டர்கள் (கம்பிவளைப்பவர்கள், கம்பிபொருத்துபவர்கள்) போன்றவர்களை பெருமளவில் தேர்ந்தெடுத்திட தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நவம்பர் 29 மற்றும் 30 ஆ‌ம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடைபெறவிருந் தது.

த‌மிழக‌த்‌தி‌ல் அ‌ண்மை‌யி‌ல் பெ‌ய்த கனமழையின் காரணமாக த‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்ட இ‌த்தே‌ர்வு‌க‌ள் டிச‌ம்ப‌ர் 6 ம‌ற்று‌ம் 7ஆ‌ம் தே‌திக‌ளி‌ல் ( சனி, ஞாய ி‌ற்று‌க்‌கிழம ை) நடைபெறுகிறது.

இலவச இருப்பிடம், இலவச விசா ஆகியவற்றுடன் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு வேலை அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உடனடியாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

எனவ ே, தங்களின் கடவு‌ச்‌சீ‌ட்டு ( பாஸ்போர்ட ்) மற்றும் அதன் 2 நகல்களுடன் நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட 6 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் இன்று (சனிக்கிழமை) ஆர்.கே.ஜி. திருமண மகால் 94,மோதிலால் தெரு புதிய பேரு‌ந்து நிலையம் அருகில் கும்பகோணம்-1 என்ற இடத்தில் காலை 8 மணிமுதல் நடைபெறும் நேர்முகத்தேர்விலோ அல்லது நாளை அரசு பிளாசா (அனுப்பிரியா திருமண மண்டபம்) 36/151, பெரிய தெர ு, பட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்விலோ கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும ், வ ி வரங் களு‌க்கு 93818-00181, 99402-76356, 94446-90026, 0442-4464268-69 எ‌ன்ற தொலைபே‌சி எ‌ண்க‌ளி‌ல் தொடர்பு கொ‌ண்டு கே‌ட்ட‌றியலா‌ம்" என்று அரியலூர் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் சுடலைக்கண்ணன் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!