Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தே‌ர்வு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (12:13 IST)
புதுடெல்ல ி: த‌மிழக‌த்‌தி‌ல் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடை‌‌நில ை ஆ‌சி‌ரிய‌ர ் ப‌‌ண ி தே‌ர்வை நடத்த வேண்டும் என்ற உய‌ர் ‌நீ‌திம‌ன்ற மதுரை கிளை உத்த ரவு செ‌ல்லு‌ம் எ‌ன்று உ‌ச்ச‌ ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

த‌‌மிழ‌‌த்தி‌ல் மாவட்ட வாரியாக 7,286 இடைநிலை ஆசிரியர்களை தே‌ர்வு செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு ‌பிற‌ப்‌பி‌த்த உ‌த்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற மதுரை கிள ை, மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சா‌ர்‌பி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட மேல்முறைய ீ‌ட்டு மனுவை நீதிபதிகள் ஆர்.வி.ரவிச்சந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய உ‌ச்ச ‌‌‌நீ‌திம‌ன்ற அம‌ர்வு விசாரித்தது.

இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந் தது அ‌ப்போத ு தமிழக அரசு சார ்‌பி‌ல் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் அந்தி அர்ஜுன ா, இடைநிலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக சென்னை உய‌ர்‌‌ நீ‌திம‌ன்ற‌ம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மாநில அளவ ிலான பதிவு மூப்பு அடிப்படையில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார்.

இதேபோ‌ல், தேர்வால் பாதிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் சிவபாலன ், பொதுவான பதிவு மூப்பு பட்டியல் அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று வா‌தி‌ட்டா‌ர ்.

இத ையடு‌த்த ு, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்புக் கொண்டதால் இந்த பிரச்சனை தொடர்பாக உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற அம‌ர்வு உறுதி செய்தத ு.

அ‌த்துட‌ன், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், தங்களுடைய பணி இடங்களை ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கூடாது' என்றும் நீதிபதிகள் அ‌றிவுறு‌‌த்த‌ியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments