Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்சிங் பாடத்தில் மாற்றம்: கலாம் யோசனை!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (10:58 IST)
காலத்திற்கேற்ப நர்சிங் பாடத் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் யோசனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். நேற்று எம்.எஸ்சி., பி.எஸ்சி. நர்சிங் பயிலும் மாணவர்களுக்கு அவர் பாடம் எடுத்தார். அப்போது கலாம் பேசியதாவது:

நர்சிங் பணி என்பது புனிதமானது; தெய்வீகமானது. மதிப்புக்குரிய பணி நர்சிங் பணியாகும். 'கைவிளக்கேந்திய காரிகை' எனப்படும் பிரான்ஸ் நாட்டிங் நைட்டிங்கேலை முன்னோடியாகக் கொண்டு நர்சுகள் பணியாற்ற வேண்டும்.

மருத்துவத்துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், நவீன தொழில் நுட்பங்களையும் நர்சுகள் அறிந்து கொள்ள வேண்டும். பணியில் இருந்தாலும் நர்சுகள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தொலைதூரக் கல்வி வாயிலாக நர்சுகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். இன்றைய கால கட்டத்திற்கேற்ப நர்சிங் பாடத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இவ்வாறு கலாம் பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments