Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதநேயம் அற‌க்க‌ட்டளை: நுழைவுத் தேர்வு

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (11:45 IST)
மு‌ன்னா‌ள் ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் சைதை துரைசா‌மி‌யி‌ன் தலைமை‌யி‌ல் இயங்கும் மனிதநேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான நுழைவுத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மையங்களில் ஜூலை 20ஆ‌ம் தே‌தி நடைபெறுகிறது.

webdunia photoWD
இதுகுறித்து இந்த அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மனிதநேய அறக்கட்டளை சார்பில் அளிக்கப்படும் இலவசப் பயிற்சிக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தேர்வு எழுத தகுதியான 4720 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நுழைவுத் தேர்வு சென்னையில் ஆர்.கே.எம்.வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி- தி.நகர், குண்டூர் சுப்பையா பெண்கள் மேல்நிலைப் பள்ளி- தி.நகர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி- மேற்கு மாம்பலத்திலும் நடக்கிறது.

ம‌ற்ற நகர‌‌ங்க‌ளி‌ல், விஐடி- வேலூர், ஸ்ரீஅம்மன் கல்லூரி, சித்தோடு-ஈரோடு, வள்ளலார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மண்மங்கலம்-கரூர், பிஷப் ஹீபர் கல்லூரி-திருச்சி, சைதை துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-மேலூர் (மதுரை), வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி, சுங்கன்கடை- நாகர்கோயில் ஆகிய மையங்களில் நடைபெறுகிறது.

20- ம் தேதி காலை, மாலை இருவேளையும் தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வு‌க்கான அனுமதிச் சீட்டு கிடைக்காதவர்கள் 98401-06162, 99406-70110 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அ‌ந்த செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments