Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்த, ஆயுர்வேத‌ம் :விண்ணப்பம் பெற 18 கடைசி

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (12:45 IST)
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேத‌ம், யுனானி, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆ‌கிய பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற ஜூலை 18-ம் தேதி கடைசி நா‌ள் எ‌ன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத் துறைச் செயலர் வி.கு. சுப்புராஜ் வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல், வரு‌ம் க‌ல்‌வி ஆ‌ண்டி‌ல் பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்), பியுஎம்எஸ் (யுனானி), பிஎன்ஒய்எஸ் (இயற்கை - யோகா மருத்துவம்), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய படிப்புகளில் அரசு கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூன் 26-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டை, மதுரை திருமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள மேற்சொன்ன இந்திய மருத்துவ முறை அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

விண்ணப்பங்களைப் பெற ஜூலை 18-ம் தேதி (பிற்பகல் 3 மணி) கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க ஜூலை 21-ம் தேதி (மாலை 5 மணி) கடைசி நாளாகும்.

இது தொடர்பான விவரங்களை சுகாதாரத் துறையின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

Show comments