Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.இ. 2‌ஆ‌ம் ஆ‌ண்டு சேர விண்ணப்பம்

Webdunia
சனி, 17 மே 2008 (17:12 IST)
பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் பி.இ. படிப்பில் 2 ஆ‌‌ம் ஆ‌ண்டி‌ல் சே‌ர்‌ந்து படி‌‌ப்பத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் வரு‌ம் 22ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்பட உ‌ள்ளது.

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் நேரடியாக பி.இ. 2 ஆ‌ம ் ஆண்டில் சேர்ந்து படிக்கலாம். இ‌ந்த முறையை லேட்டரல் என்ட்ரி எ‌ன்று அழை‌க்‌கி‌ன்றன‌ர்.

அதன்படி வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் 22-ந் தேதி முதல் ஜுன் மாதம் 10-ந் தேதி வரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக், புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி, கோவை தொழில் நுட்ப கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை நகர் முத்தையா பாலிடெக்னிக், பாலக்கோட்டில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக், ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம், காஞ்சீபுரம் பக்தவச்சலம் பாலிடெக்னிக், நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக், கரூர் எம்.குமாரசாமி ராஜா என்ஜினீயரிங் கல்லூரி, பர்கூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் ‌கிடை‌க்கு‌ம்.

மதுரை‌யி‌ல், மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம் வலிவலம் தேசகர் பாலிடெக்னிக், ஊட்டி அரசு பாலிடெக்னிக், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக், சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் என்ஜினீயரிங் கல்லூரி, வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, திருவண்ணாமலை எஸ்.கே.பி.என்ஜினீயரிங் கல்லூர ி‌யி‌ல் ‌வி‌ண்ண‌ப்‌ப‌ங்களை மாணவ‌ர்க‌ள் பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம்.

ம‌ற்று‌ம் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி, திருச்சி அரசு பாலிடெக்னிக், வேலூர் அரசு பாலிடெக்னிக், விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், விருதுநகர் வி.எஸ்.வி.என்.பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 25 கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் எ‌ன்று தமிழ்நாடு தொழில் நுட்ப இயக்குனரக ஆணையர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments