Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய், சீனா, சவூதி அரேபியாவில் மார்க்கெட்டிங் வல்லுனர்களுக்கு வேலை!

Webdunia
ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (12:16 IST)
துபாய், சீனா, சவூதி அரேபியாவில் மார்க்கெட்டிங் வல்லுனர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளத ு எ‌ன்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ ன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர ், நிர்வாக இயக்குனர் பு.ரா.பிந்துமாதவன் கூறுகை‌யி‌ல், துபாய் நாட்டில் உள்ள வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் ஒன்றிற்கு 35 வயதிற்குட்பட்ட சி.ஏ. அல்லது எம்.பி.ஏ. படித்து 6 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிதிமேலாளர்கள் தேவை. அதுபோல 30 வயதிற்குட்பட்டு பி.காம ். தேர்ச்சி பெற்று 3 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ள உதவி கணக்காளர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

துபாய், சீனா, சவூதி அரேபியாவில் பணிபுரிய பட்டப்படிப்பு படித்து 2 ஆண்டுகளுக்கு மேல் வணிகம் தொடர்பான நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம், ஏற்றுமதிக்கான அறிவுத்திறன் பெற்ற விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் வல்லுனர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். மேற்கண்ட பணிகளுக்கு கம்ப ்ய ூட்டரில் இ.ஆர்.பி. என்விரான்மென்ட் பணி தொடர்பில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதி, அனுபவம் உள்ளவர்கள் தங்களது கல்வி, அனுபவம், கடவு‌ச் ‌சீ‌‌ட்டு ஆகியவற்றின் நகல்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து, சென்னை அடையாறு எண்.48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, (டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில்) என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தின் முதல்தளத்தில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments