Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புள்ளியியல் அலுவலர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு‌க்கு ‌‌வி‌ண்ண‌ப்‌‌பி‌க்கலா‌ம்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (11:34 IST)
இந்திய அளவிலான புள்ளியியல் அலுவலர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வ ு‌க்கு விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது கு‌றி‌த்து அரசு ப‌ணியாள‌ர் தே‌ர்வாளணய‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல், புள்ளியியல் அலுவலர் (ஸ்டாஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர்ஸ்) கிரேடு 3 மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் உள்ள கம்ப ்ய ூட்டர் தொடர்பான காம்பிளர் பணியிடங்கள் அகில இந்திய அளவில் நிரப்பப்பட உள்ளன. புள்ளியியல் அலுவலர்களுக்கு 199 பணியிடங்களும், காம்பிளர்களுக்கு 761 பணியிடங்களும் நிரப்பப்படும்.

14-4-2008 அன்று 18 முதல் 25 வயது உடையவராக புள்ளியியல் அலுவலர் பணிக்கும், 18 முதல் 27 வயது உடையவராக காம்பிளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் வழக்கம் போல ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு வயது வரம்பில் விதிவிலக்கு உண்டு.

புள்ளியியல் அலுவலர் தேர்வுக்கு புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் முதுகலைபட்டம் பெற்றிருக்கவேண்டும்.

காம்பிளர் பணிக்கு பொருளாதாரம் அல்லது புள்ளியியல், கணிதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க பிராந்தியம் மற்றும் துணை பிராந்திய ஆணைய அலுவலகம் உள்ள இடங்களில் உள்ளவர்கள் ஏ‌ப்ர‌ல் 11ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற இடங்களில் உள்ளவர்கள் ஏ‌ப்ர‌ல் 17ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு . ஜூ‌ன் 15 ஆ‌ம் தே‌தி நடைபெற உள்ளது.

இதுகுறித்த விவரங்களை அறிய ஆணையத்தின் htttp://www.ssc.nic.in. என்ற இணையதளத்தில் காணலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments