Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்‌ளிகளில் மேலும் 2,020 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (10:19 IST)
அரசு பள்ளிகளில் மேலும் 2,020 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கண்ணன் தெர ி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து ஆ‌சி‌ரிய‌ர் தே‌ர்வு வா‌ரிய அ‌திகா‌ரி க‌ண்ண‌ன் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், அரசு ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும் ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் பணி இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையிலும் தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.

அரசு மேல்நிலைப்பள்ளிகள ், உயர்நிலைப்பள்ளிகளில் 1,398 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் உள்பட 854 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான பதிவுமூப்பு பட்டியலை சென்னை சாந்தோமில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டிருக்கிறது. இந்த மாத இறுதியில் பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுவிடும ்.

அரசு பள்ளிகளில் புதிதாக மேலும் 2,020 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் உள்பட பாடவாரியான பதிவுமூப்பு பட்டியல் விரைவில் தயாரிக்கப்படும்.

இதுவரை ஒரு காலி இடத்திற்கு ஒருவர் மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு வந்தனர். அரசின் புதிய உத்தரவுப்படி பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஒரு காலி இடத்திற்கு 5 பேர்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும் என்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments