Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காவ‌ல் துறைக்கு 5,959 ஆண்- பெண் காவ‌ல‌ர்க‌ள் தேர்வு!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (09:14 IST)
தமிழக காவ‌ல ்துறைக்கு 5,959 ஆண்-பெண் காவல‌ர்க‌ள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏப்ரல் 15 ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்ப மனுக்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில ், தமிழக காவ‌ல் துறைக்கு இரண்டாம் நிலை ஆண் காவல‌ர் 4,171 பேரும், பெண் காவல‌ர் 1,788 பேரும் (மொத்தம் 5,959 பேர்) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இது தொடர்பான அறிக்கை ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பதாரர்களின் தகுதிகள் குறித்த தகவல்களும் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. www.tn.gov.in/tnusrb என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் ரூ.150-க்கான வங்கி `டிராப்ட்'டையும் அனுப்பி வைக்க வேண்டும்.

ஏப்ரல் 15 ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்ப மனுக்கள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப மனுக்களை தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், நம்பர்: 807, 2-வது தளம், அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments