Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை‌ வா‌ய்‌ப்பு: ஊனமுற்றோ‌ர்க‌ள் 25‌ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (10:39 IST)
த‌னியா‌ர் துறை‌யி‌ல் வேலைவா‌ய்‌ப்பு பெற வே‌ண்டுமானா‌ல் ஊனமு‌ற்றோ‌ர்க‌ள் ‌பி‌ப்ரவ‌ரி 25ஆ‌ம் தே‌தி‌ வரை ‌வி‌ண்ண‌ப்‌‌பி‌க்க‌லா‌ம் எ‌ன்று த‌மிழக அரசு கூ‌றியு‌ள்ளது.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினியை இயக்கும் பயிற்சியைப் பெற்ற ஊனமுற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் தகுதி வாய்ந்த ஊனமுற்ற நபர்களை பணிக்கு தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் இயங்கும் கணினியில் தகவல்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கில தட்டச்சில் ஓரளவிற்கு பயிற்சி பெற்ற உடல் ஊனமுற்ற நபர்கள் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு ரூ.2 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை அளித்து இலவசமாக ஒரு மாதம் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.

பயிற்சிக்கு பின்னர் அந்த நிறுவனத்திலேயே தொடக்கத்தில் குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும். திறமைக்கேற்ப ஊதியம் அதிகரிக்கப்படும். எனவே விருப்பமுள்ள ஊனமுற்ற நபர்கள் அடையாளஅட்டை, கல்விச் சான்றிதழ், பயிற்சிச்சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழுடன் சென்னை மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர், வனத்துறை பாதுகாவலர் அலுவலக கட்டிடம், டி.எம்.எஸ். அலுவலக வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ 25 ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எ‌ன்று தமிழக அரசு தெரிவ ி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments