Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதி அரேபியாவில் குழந்தைநல மருத்துவர்களுக்கு வேலை!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (11:21 IST)
சவுதி அரேபியா அரசு மரு‌த்துவமனை‌யி‌ல ் குழந்தைநல மருத்துவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுத்தர தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலை வ‌ ர ் ம‌ற்று‌‌ம ் நிர்வாக இயக்குனர் பி.ஆர்.பிந்துமாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், சவுதி அரேபியா சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் குழந்தைகளுக்கான இதய மருத்துவ மையத்தில் பணியாற்ற இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் குழந்தைநல மருத்துவர்கள்,

மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் மகளிர் இ.சி.ஜி. டெக்னீசியன்கள், மகளிர் ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னீசியன்கள், குழந்தைநல கேத்தரைசேஷன் டெக்னீசியன்கள், 3 ஆண்டு அனுபவம் பெற்ற பர்யூசனிஸ்டுகள், தீவிரி சிகிச்சைப் பிரிவில் 3 ஆண்டு அனுபவம் பெற்ற பெண் நர்சுகள் தேவைப்படுகிறார்கள்.

உரிய கல்வித்தகுதி, பணி அனுபவம் பெற்ற சிறப்பு மரு‌த்துவ‌ர்க‌ள், மருத்துவ பணியாளர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் ம‌ற்றும் கலர் போட்டோவுடன் விண்ணப்பத்தை சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

முகவர ி : தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தமிழ்நாடு வீட்டுவசதி வணிக வளாகம், முதல் தளம், எண் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை 600 020.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments