Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 லட்சம் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (20:23 IST)
நாடு முழுவதிலும் அதிக மதிப்பெண்கள் பெறும் 25 லட்சம் பள்ளி சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.1,868.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
டெல்லியில் இன்று நடந்த 11வது ஐந்தாண்டு திட்டத்தின் மீதான மத்திய அமைச்சரவை கூட்டதை அடுத்த ு, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில ், " அவற்றில் 30 விழுக்காடு உதவித்தொகை மாநிலங்கள ், யூனியன் பிரதேசங்களை சார்ந்த மாணவிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளத ு" என்றார்.
இந்தியாவில் அரசு அல்லது தனியார் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒருவருக்கு அதிகபட்ச கல்விக்கட்டணமாக மாதம் ரூ.350 உதவித்தொகை வழங்கப்படும்.
ஆறாம் வகுப்பு முதல் விடுதிச்செலவு ரூ.600-ல் இருந்தும ், விடுதியில் தங்காத மாணவர்களுக்கு முதலாம் வகுப்பில் இருந்து ரூ.100-ம் வழங்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து சேர்க்கை கட்டணமாக ஆண்டுக்கு ரூ.500 வழங்கப்பட உள்ளது.
இத்திட்டங்களுக்கான செலவில் ரூ.1,408.40 கோடி மத்திய அரசும ், ரூ.460.10 கோடி மாநில அரசும் பகிர்ந்துகொள்கிறது. யூனியன் பிரதேசங்களை பொருத்தவரை அனைத்து செலவையும் மத்திய அரசே ஏற்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments