Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌‌ல்லறை வ‌ர்‌த்தக மேலா‌ண்மை : ஜனவ‌‌‌ரி 27 இ‌ல் நுழைவு‌த் தே‌ர்வு!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (14:35 IST)
சில்லறை வர்த்தக மேலாண்மை குறித்த பட்டமேற்படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வு ஜனவரி 27-ஆம் தேதி நட‌க்கிறது. சென்னை உள்பட 25 இடங்களில் இதற்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.

நாடுமுழுவதும் 40-க்கும் மேற்பட்ட வர்த்தக மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் சென்னை வர்த்தகப் பள்ளி (சி.பி.எஸ்.) உள்ளிட்ட 15 நிறுவனங்கள் சில்லறை வர்த்தக மேலாண்மை படிப்புகளை அளிக்க முடிவு செய்துள்ளன.

ஏதாவது ஒரு பாட‌ப் பிரிவில் 50 ‌விழு‌க்காடு மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அந்தந்த நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்‌யி‌ல் மாணவர் சேர்க்கைக்காக ஒரு பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 15 கல்வி நிறுவனங்களிலும் சேர்த்து 1,500 மாணவர்கள் சேர்‌க்க‌ப்பட உள்ளனர். இ‌ந்த நுழைவுத் தேர்வு ஜனவரி 27-ம் தேதி நட‌க்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் பெற இணையதள முகவரி: www.car t2008. com.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments