Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களை பாதிக்கும் H1-பி விசா கட்டணம் உயர்வு!

Webdunia
சனி, 3 நவம்பர் 2007 (20:39 IST)
சாண்டர்ஸ்-கிரேஸ்லே சட்ட வரைவிற்கு அமெரிக்க மக்களைவயில் (செனட்) ஒப்புதல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து H1- பி விசா கட்டணம் 500 அமெரிக்க டாலர் அளவிற்கு உயருகிறது. இதனால் பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் படிக்க, வேலைக்கு செல்லும் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

தொழிலாளர் நாள், சுகாதாரம், மனித சேவைப் பணிகள் துறைக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக சாண்டர்ஸ்-கிரேஸ்லே சட்ட வரைவிற்கு அமெரிக்க மக்களைவயில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக H1- பி விசா கட்டணம் 3000 டாலரிலிருந்து 3500 டாலராக உயரும் நிலை உருவாகியுள்ளது.

மக்களைவயில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஒப்புதலுக்காக அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்படும் போது அதனை நிராகரிக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. எனினும் அரசுக்கு 11 மில்லியன் டாலர் அளவிற்கு நிதி தேவைப்படும் நிலையில் இந்த சட்ட வரைவை எதிர்க்கும் எண்ணம் வராது என்று பெரும்பாலான செனட்டர்கள் கூறுகின்றனர்.

அதிகரிக்க உத்தேசித்துள்ள இந்த 500 அமெரிக்க டாலர்களும் ஜேக்கப் ஜேவிட்ஸ் கிப்ட்டர்டு அண்ட் டேலண்டர்டு திட்டத்திற்கு வழங்கப்பட உள்ளது. கணிதம், அறிவியலில், பொறியியல் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் தற்போது 15,000 அமெரிக்க டாலர் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள் அமெரிக்கா வந்து படிக்கின்றனர். இந்த உதவித் தொகையை கட்டுப்படுத்தவே அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிகிறது.

மேலும் தொழிலாளர், சுகாதாரம் மற்றும் மனிதச் சேவைகள் ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக அமெரிக்க மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவால் தொழிலாளர், சுகாதாரம், மனித சேவைத்துறை, கல்வி தொடர்பான துறைகளில் படிக்க, பணியாற்றச் செல்லும் இந்தியர்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரிதும் தடையாக அமையும் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments