Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளி ஒப்படைப்பு பணியால் 990 கோடி டாலர் சேமிப்பு!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (20:06 IST)
அமெரிக்க நிறுவனங்கள் அலுவல ் வெள ி ஒப்படைப்ப ு பணியால் (பி.பி.ஓ.) 990 கோடி டாலர ் சேமிக்க முடியும் என ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் அன்றாட நிர்வாக அலுவல்கள ், ஊழியர்களுக்கு சம்பளப் பட்டியல் தயாரிப்பத ு, வாடிக்கையாளர்களின் குறைகளை பதிவு செய்வத ு, மருத்துவமனைகளின் குறிப்புகளை ஆவணப்படுத்துவத ு, மருத்துவர்களின் பரிந்துரைகளை ஆவணப்படுத்துவது உட்பட பல்வேறு பணிகளை இந்தியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் கொடுக்கின்ற ன.

அமெரிக்காவைச் சேர்ந்த ஊழியர்களுடன் ஒப்பிடுகையில ், இந்தியா போன்ற நாடுகளில் வேலை செய்பவர்களி்ன் சம்பளம் மிகக்குறைவ ு. இதனால் நிர்வாகச் செலவை குறைப்பதற்கா க, அமெரிக்க ா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளிடம் பணியை ஒப்படைக்கின்ற ன.

இதன் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் 990 கோடி டாலர் சேமிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளத ு. போஸ்டர் என்ற ஆய்வு நிறுவனம ், வெளி ஒப்படைப்பு பணி ஆலோசனை நிறுவனமான ட ி. ப ி. ஐ நிறுவனத்துடன் இணைந்து ஆய்வை மேற்கொண்டத ு.

இதில் இருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் பணியை ஒப்படைப்பதால் 12 முதல் 17 சதவிதம் வரை செலவு குறைகின்றத ு. குறைந்த அளவு மற்றும் அதிகளவு பணியை ஒப்படைக்கும் நிறுபனங்கள் 12 சதவிகிதம் வரை நிர்வா கச ் செலவை சேமிக்கின்ற ன. நடுத்தர அளவ ு, முழு அளவு பணியை ஒப்படைக்கும் நிறுவனங்கள் 17 சதவிதம் வரை நிர்வா கச ் செலவை சேமிக்கின்றன என்று போஸ்டர் ஆய்வு நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் டாக்டர் பால் ரோகிர்க் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார ்.

ஒவ்வொரு நிறுவனமும் அதன் முக்கியமான பணிகளான உற்பத்தியை அதிகரிப்பத ு, வர்த்தகத்தை அதிகரிப்பத ு, விரிவுபடுத்துவது போன்ற வேலைகள ைத ் தவி ர, அன்றாட நிர்வாக வேலைகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்ற ன. இதனால் அவைகளின் செலவு குறைவதுடன ், அத்தியாவசிய வேலைகளிலும் கவனம் செலுத்த முடிகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளத ு.

அமெரிக்க நிறுவனங்கள ், அவைகளின் நிர்வாக பணிகளை வெளிநாடுகளில் ஒப்படைப்பதால ், செலவினத்தில் குறைந்த பட்சம் 15 விழுக்காடாவது சேமிக்கின்ற ன. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் 990 கோடி டாலர் சேமிக்க முடியும்.

உலக அளவில் நிர்வாக வெளி ஒப்படைப்பு பணியின் மதிப்பு வருடத்திற்கு 7700 கோடி டாலருக்கு அதிகமாக இருக்கின்றத ு. இதில் தற்சமயம் 30 சதவித பணிகள் மட்டும ே, வெளிநாடுகளில் ஒப்படைக்கப்படுகின்ற ன. அதாவது அமெரிக்க நிறுவனங்கள் 11,000 கோடி டாலர் மதிப்பிற்கு நிர்வாக பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: பள்ளி தாளாளர்-முதல்வர் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தொடங்கியது வேட்புமனு தாக்கல்.. சுயேட்சையின் முதல் மனு..!

திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ஒரே இரவில் ஆறு முறை ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

தேர்வுக்கு பயந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12ஆம் வகுப்பு மாணவர்.. டெல்லியில் பரபரப்பு..!

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

Show comments