Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சி பள்ளிகளில் யோகா பயிற்சி

Webdunia
சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணாக்காகளுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை மேயர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

சென்னை மாநகரில் மொத்தம் 175 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று மாநகராட்சி பள்ளிகளில் யோகா பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

அமைந்தகரையில் உள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நி ல ¨ப் பள்ளியில் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு யோகா பயிற்சியை தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் யோகா பயிற்சி குறித்து பேசுகையில், யோகா பயிற்சி பெற்றால் உடல் வலிமை, மன வலிமையை பெறுவதோடு ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இது மாணாக்கர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

Show comments