Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் பயிற்சி : கட்-ஆப் மார்க் வெளியீடு

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2007 (12:00 IST)
ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர கட்-ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ்- 2 படித்துவிட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சியில ் சேர 21,839 இடங்கள் ஒற்றைச்சாரா முறையில் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன.

இந்த இடங்களுக்கு 48 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு கவுன்சிலிங் சென்னை டி.பி.ஐ.யில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் வளாகத்தில் நடைபெற உள்ளது.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு கட் ஆப் மதிப்பெண் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட் ஆப் மதிப்பெண ் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இடம் கிடைக்கும்.

கட் ஆப் மதிப்பெண் விவரம் :

பொதுப்பிரிவு

தமிழ் வழியில் படித்த பொதுப்பிரிவு மாணவிகளுக்கு அறிவியல் -885, கலைப்படிப்புகள்-963, வொகேசனல்-982 , மாணவர்களுக்கு அறிவியல்-725, கலைப்படிப்புகள்-900, வொகேசனல்-955 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிற்பட்டோர்

பிற்பட்டோர் பிரிவில் மாணவிகளுக்கு அறிவியல்-871, கலைப்படிப்புகள்-963, வொகேசனல்-977மாணவர்களுக்கு அறிவியல்-542, கலைப்படிப்புகள்-540, வொகேசனல் 848 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிற்பட்டோர ் மற்றும் சீர்மரபினர் பிரிவில் மாணவிகளுக்கு அறிவியல்-880, கலைப்படிப்புகள்-957, வொகேசனல்-980, மாணவர்களுக்கு அறிவியல்-549, கலைபப்படிப்புகள்-882, வொகேசனல்-940 ஆகும்.

எஸ்.சி.

எஸ்.சி. பிரிவில் மாணவிகளுக்கு அறிவியல்-856, கலைப்படிப்புகள்-938, வொகேசனல்-967 மாணவர்களுக்கு அறிவியல்-725, கலைப்படிப்புகள்-895, வொகேசனல்-952 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்.டி. பிரிவில் மாணவிகளுக்கு அறிவியல்-720, கலைப்படிப்புகள்-791, வொகேசனல்-856 மாணவர்களுக்கு அறிவியல்-725, கலைப்படிப்புகள்-852, வொகேசனல்-928 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பிரிவினர்

இது தவிர உடல் ஊனமுற்றவர்கள் கட் ஆப் மார்க் -716 , முன்னாள் ராணுவத்தினர் இடஒதுக்கீட்டில் கட்ஆப்மார்க்-971

சுதந்திர போராட்ட தியாகிகள் இடஒதுக்கீடு கட்ஆப் மார்க்-999

மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், உருது ஆகிய வழிகளில ் படித்தவர்களுக்கான கட் ஆப் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

தமிழ் வழியில் பிற்பட்டோர் பிரிவில் உள் ள மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி படித்தால் 10 வருடங்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள் அதனால் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் எஸ்.சி. மாணவர்கள் படித்து முடித்தால் உடனே ஆசிரியர் வேலை காத்திருக்கிறது. இதனால் எஸ்.சி. மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு பிற்பட்டோர் பிரிவு மாணவர்களைவிட கட் ஆப் மதிப்பெண் அதிகம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments