Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2007 (12:51 IST)
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பள்ளிகளில் சுமார் 8,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பதிவுமூப்பு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

இதில் ஒரு காலி இடத்திற்கு ஒருவர் பெயர் மட்டுமே பரிந்துரை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் முன்பு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்களும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலம் நியமிக்கப்பட்டு வந்தார்கள். அதன்பட ிய ே, அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவுமூப்பு மூலம் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக மாவட்ட வாரியான பதிவு மூப்ப ு பட்டியல் கேட்கப்பட்டு ச ென ்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தலைமை அலுவலகத்தில் மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி ஒரு மாதத்திற்கு மேலாக தீவிரமாக நடந்தது.

இந்த நிலையில், அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பதிவ ு மூப்ப ு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில ் (< www.trb.tn.nic.in>) செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது.

இதன்படி, சுமார் 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். முன்பு ஒரு காலி இடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுதாரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படும்.

இந்த முறையில் லஞ்சம் புகும் அபாயம் உள்ளதால் அரசின் புதிய அறிவிப்பின்படி, ஒரு இடத்திற்கு ஒருவரின் பெயரே பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. பதிவுதாரர்களின் ச ான ்றிதழ்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

Show comments