Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.எ‌ன்.ஓ.யு‌.‌வி‌ல் எம்.எட். படிப்பு

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (11:39 IST)
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண ்டு முத‌ல் எம்.எட். படிப்பு கொண்டு வரப்படும் என்று ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன் துணைவேந்தர் எம்.டி.வி.கல்யாணி ஆனி தெரிவித ்து‌ள்ளா‌ர்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.டி.வி.கல்யாணி ஆனி பதவி ஏற்றுள்ளார். அவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி மையங்களை பார்வ ை‌யிடு‌கிறா‌ர்.

நே‌ற்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், பி.எட். ப‌ட்ட‌ப் படிப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது. அத்துடன் நின்றுவிடாமல் எம்.எட் (ஆசிரியை பயிற்சி) கொண்டுவரப்படும். அது அடுத்த கல்வி ஆண்டுமுதல் அமல்படுத்த அதற்கான முயற்சிகள், நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

அடுத்து ஆனிமேசன் படிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் நல்ல வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. அதேப்போல கிரிமினாலஜி படிப்பும் கொண்டு வரலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனிமேசன் மற்றும் கிரிமினாலஜி ஆகிய படிப்புகளை கொண்டுவருவது பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறது. முடிந்தவரை அவற்றை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். எப்படியும் தமிழ்நாட்டில் உள்ள சாதாரண மக்களும் நிறைய வேலைவாய்ப்பை பெறவேண்டும் என்பதே எனது விருப்பம் எ‌ன்று எம்.டி.வி.கல்யாணி ஆனி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments