1.79 ல‌‌ட்ச‌ம் ஆ‌சி‌ரிய‌ர்களை ‌நிய‌மி‌க்க ம‌த்‌திய அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (19:19 IST)
நாடு முழுவது‌ம் 1.79 ல‌‌ட்ச‌ம் ஆ‌சி‌ரிய‌ர்களை கூடுதலாக ‌நிய‌மி‌க்கவு‌ம், 11,188 பு‌திய ப‌ள்‌ளி‌க்கூட‌ங்க‌ள் க‌ட்டவு‌ம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நட‌ந்த பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்கான ம‌த்‌திய அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல் அ‌‌ளி‌த்து‌ள்ளது.

நாடு முழுவதும் உயர்நிலை கல்வி வசதியை அதிகரிப்பதற்காக 11 மற்றும் 12-வது ஐந்தாண்டு திட்டங்களில் ரூ.20,120 கோடியிலான "ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்சா அபியான ்" திட் ட‌ம் செய‌ல்படு‌த்த‌ப்பட உ‌ள்ளது. இதன்படி, 11,188 புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப்படு‌கிறது. 1.79 ல‌‌ட்ச‌ம ் ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்கப்படு‌கிறா‌ர்க‌ள்.

இதற்கான செலவில் 11-வது திட்டக் காலத்தில் மத்திய அரசின் பங்கு 75 ‌விழு‌க்காடு, மாநில அரசின் பங்கு 25 ‌வி‌ழு‌க்காடு என்ற விகிதத்தில் இருக்கும். 12வது திட்ட காலத்தில் திட்டச் செலவு சரிபாதியாக பகிர்ந்து கொள்ளப்படும்.

2005-06 ஆம் ஆண்டில் 9, 10 வகுப்பில் மாணவர்களின் வருகைப் பதிவு 56.26 ‌விழு‌க்காடாக உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இதை 75 ‌விழு‌க்காடாக உயர்த்தி உயர்நிலை கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோ‌க்கமாகு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

Show comments