Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 - மா‌ர்‌ச் 2 ; எஸ்.எஸ்.எல்.சி. - மா‌ர்‌ச் 25 : பொது‌த்தே‌ர்வு தே‌தி அ‌றி‌வி‌ப்பு

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (18:48 IST)
பிளஸ ் 2, எஸ்.எஸ்.எல்.சி. ஆண்டு இறுதி பொது‌த் தேர்வுக்கான காலஅட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ஆ‌ம் தேதி தொட‌ங்‌கி மா‌ர்‌ச் 23ஆ‌ம் தே‌தி வரை‌யிலு‌ம், எஸ்.எஸ்.எல்.சி. தே‌ர்வு மா‌ர்‌ச் 25ஆ‌ம் தே‌தி தொட‌ங்‌கி ஏ‌‌ப்ர‌ல் 8 ஆ‌ம் தே‌தி வரை‌யிலு‌ம், மெட்ரிக்குலேஷன் தேர்வு மார்ச் 18ஆ‌ம் தேதி தொட‌ங்‌கி ஏ‌ப்ர‌ல் 8ஆ‌ம் தே‌‌தி வரை‌யிலு‌ம் நட‌க்‌கிறது.

பிளஸ் 2 தேர்வை 6 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகளு‌ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் பேரு‌ம், மெட்ரிக்குலேஷன் 10ஆ‌ம் வகுப்பு தேர்வை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 400-க்கு மேற்பட்டவர்களும் எழுதுகிறார்கள். மொத்தத்தில் 18 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

பிளஸ்-2 தேர்வு அ‌ட்டவணை :

மார்ச் 2 - தமிழ் முதல் தாள்
மார்ச் 3 - தமிழ் 2-ஆம் தாள்
மார்ச் 4 - உளவியல், சுருக்கெழுத்து
மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 6 - ஆங்கிலம் 2-ஆம் தாள்
மார்ச் 7 - தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
மார்ச் 9 - இயற்பியல், வணிகவியல்
மார்ச் 11 - புவியியல், வணிக கணிதம்
மார்ச் 12 - வேதியியல்
மார்ச் 13 - கணக்குப் பதிவியல்
மார்ச் 14 - மனையியல், நுண்ணுயிரியல்,உயிரி-வேதியியல், நர்சிங், ந ிய ூட்ரிசியன்ஸ் மற்றும் டயட்டிக்ஸ்
மார்ச் 16 - கணிதம், விலங்கியல்
மார்ச் 17 - பொருளாதாரம்
மார்ச் 18 - தொழில்நுட்ப பாடங்கள்
மார்ச் 19 - கம்ப ்ய ூட்டர் சயின்ஸ், சிறப்பு மொழிப்பாடங்கள், சிறப்பு ஆங்கிலம், புள்ளியியல்
மார்ச் 21 - அரசியல் அறிவியல், அடிப்படை அறிவியல், இந்திய கலாசாரம்
மார்ச் 23 - உயிரியல், தாவரவியல், வரலாறு.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அ‌ட்டவணை :

மார்ச் 25 - தமிழ் முதல் தாள்
மார்ச் 26 - தமிழ் 2-ஆம் தாள்
மார்ச் 30 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 31 - ஆங்கிலம் 2-ஆம் தாள்
ஏப்ரல் 3 - கணிதம்
ஏப்ரல் 6 - அறிவியல்
ஏப்ரல் 8 - சமூக அறிவியல்.

மெட்ரிக்குலேஷன் தேர்வு அ‌ட்டவணை :

மார்ச் 18 தமிழ் முதல் தாள்
மார்ச் 20 தமிழ் 2-ஆம் தாள்
மார்ச் 24 ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 25 ஆங்கிலம் 2-ஆம் தாள்
மார்ச் 30 கணிதம் முதல் தாள்
மார்ச் 31 கணிதம் 2-ஆம் தாள்
ஏப்ரல் 2 அறிவியல் முதல் தாள்
ஏப்ரல் 3 - அறிவியல் 2-ஆம் தாள்
ஏப்ரல் 6 - வரலாறு மற்றும் குடிமையியல்
ஏப்ரல் 8 - புவியியல், பொருளாதாரம்.

இ‌ந்த அதிகாரப்பூர்வ தேர்வுக்கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments