Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (17:30 IST)
கல்வித்துறை மூலம் விவசாய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து விவசாய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சமூக பாதுகாப்புநலம் என்ற திட்டத்தின் கீழ் கல்வித் துறை மூலமாக இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,250ம், மாணவிகளுக்கு ரூ.1,500ம், 12 ஆ‌ம ் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,750ம், மாணவிகளுக்கு ரூ.2,000 ம ும் உத‌வி‌த்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையினை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரின் விவசாய அடையாள அட்டை, ‌ நியாய‌விலை அ‌ட்டை சாதிச்சான்று மற்றும் 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள் ஆகியவற்றின் நகல் சான்றுகளோடு விண்ணப்பிக்க வேண்டும்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் மாவட்ட கல்வி அலுவலர்களிடமும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் முதன்மை கல்வி அலுவலரிடமும் விண் ணப்பித்து இந்த திட்ட பயனை பெற்றுக ் கொள்ளலாம் எ‌ன்று முத‌ன்மை க‌ல்‌‌வி அ‌திகா‌ரி ஒருவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments