Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.எ‌ஸ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு டிச.23இ‌ல் தே‌ர்வு தொட‌க்க‌‌ம்!

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:44 IST)
நெல்ல ை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறித் தொடர்கல்வி மாணவர ்‌களுக்கான தேர்வுகள் வருகிற 23 ஆ‌ம ் தேதி தொடங்குகிறது எ‌ன்று அ‌ப ்பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) முனைவர் நா.கண்ணன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்த ி‌க ்குறிப்பில ், " பி.ஏ. (அனைத்து பாடப் பிரிவுகளும்), பி.காம்., பி.லிட், பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி., மற்றும் அப்சல்-உல்-உலமா ஆகிய பாடபிரிவுகளுக்கான தேர்வுகள் நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு ம.தி.தா இந்துக் கல்லூரியிலும், குமரி மாவட்ட மாணவர்களுக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியிலும், தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் காயல்பட்டினம் வாவு வஜீஹா பெண்கள் கல்லூரியிலும் நடைபெறும்.

எம்.ஏ. (அனைத்து பாடப் பிரிவுகள்), எம்.காம்., எம்.எஸ்.சி. (அனைத்து பாடப்பிரிவுகள்), ஆகியவற்றுக்கான தேர்வுகள் வருகிற 23 ஆ‌ம் தேதியும், எம்.எஸ்சி. சாப்டவேர் டெக்கானலஜி மற்றும் மேனேஜ்மென்ட் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ பாடப்பிரிவுக்கு வருகிற 26 ஆ‌ம் தேதியும் எம்.பில். (அனைத்து பாடப்பிரிவுகள்), தேர்வுகள் வருகிற 27 ஆ‌ம் தேதியும் மற்றும் பி.ஜி.டி.சி.ஏ., தேர்வுகள் ஜனவரி மாதம் 9 ஆ‌ம் தேதியும் தேர்வுகள் தொடங்குகிறது.

இந்த தேர்வுகள் நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியிலும், தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் காயல்பட்டினம் வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும், குமரி மாவட்டத் தேர்வாளர்களுக்கு நாகர்கோவில் தெ.தி. இந்துக்கல்லூரியிலும் நடைபெறும்.

ஹால்டிக்கெட ், தேர்வு அட்டவணை மற்றும் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய தேர்வு மைத்தின் பெயர் ஆகியவை, அனைத்தும் மாணவர்களுக்கு அவர்களது வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments