Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்விக் க‌ட‌ன் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (11:05 IST)
மாணவ மாணவியர் கல்விக் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை, வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட ்டு‌ள்ள செய்திக்குறிப்பில ், " கடலூர் மாவட்ட மாணவ, மாணவியர் கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், வங்கிகளால் சிறப்பு கல்விக் கடன் முகாம் நடத்தப்பட இருக்கிறது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் கல்வி, கலை- அறிவியல், பட்டயப் படிப்புகள் பயிலும் மாணவ மாணவியர் கல்விக் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு உ‌ட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தை (ஊராட்சி ஒன்றிய அலுவலகம்) அணுகி விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

மாணவர்கள் தங்களைப் பற்றிய விவரம், கல்லூரியில் சேர்ந்த விவரம், கட்டணம், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள், வரும் 14 ஆ‌ம ் தேதி வரை கிடைக்கும். விண்ணப்பங்களைப் பெற 14 ஆ‌ம் தேதி கடைசி நாளாகு‌ம். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்படும்" என்று கூ‌ற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments