Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவ‌ர்களு‌க்கு ஓவியப்போட்டி!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (10:48 IST)
திருச்சியில் வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி பள்ளி மாணவ- மாண‌வியரு‌க்கான ஓவியப்போட்டி நடக்கிறது.

இந்த ஆண்டு சிறுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட அருங்காட்சியகம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டியை வரு‌ம் 9ஆ‌ம ் தேதி காலை 10 மணிக்கு புத்தூரில் உள்ள பிஷப் ஈபர் மேல்நிலைப்பள்ளியில் நடத்த உள்ளது.

முதல ், 2-வது மற்றும் 3, 4, 5- வது மற்றும் 6, 7, 8- வது மற்றும் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆ‌கிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

மாணவர்கள் தத்தம் பிரிவுக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு தலைப்பில் விரும்பும் வரைபொருள் கொண்டு வரையலாம். வரைபொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். ஓவிய அட்டை மட்டும் போட்டி நாளில் வழங்கப்படும்.

தங்கள் பள்ளியில் இருந்து போட்டியில் பங்கு பெற விரும்பும் மாணவ, மாணவிகள் பட்டியலை ஒவ்வொரு பிரிவுக்கும் 5 பேருக்கு ‌ மிக ாமல் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த போட்டி தொடர்பான பணிகளை கவனிக்க போட்டி முடியும் வரையில் அனைத்து நாட்களிலும் அருங்காட்சியகம் இயங்கும். மேலும் விவரம் வேண்டுவோர் நேரிலோ அல்லது 0431-2708809 என்ற தொலைபே‌சி எண் மூலமோ தொடர்பு கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று திருச்சி அரசு அருங்காட்சியக காப்ப ா‌ட்‌சிய‌ர ் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments