Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அ‌திக‌ரி‌ப்பு: அமை‌ச்ச‌ர் தக‌வ‌ல்!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (10:45 IST)
11- வத ு ஐந்தாண்டு திட்ட காலத்தில் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் (18 முதல் 24 வயது வரை) விகிதத்தை 5 விழுக்காடு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் புரந்தேஸ்வரி நாடாளுமன்றத்தில் அண்மையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டியுள்ளதாக கு‌‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ள அமை‌ச்ச‌ர், இத்திட்ட காலத்தில் பல்வேறு திட்டங்கள் வாயிலாக தரமான உயர் கல்வியை மாணவர்கள் பெறுவதற்காக ரூ.84,943 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எ‌‌ன்றா‌ர்.

உயர்க் கல்வி துறைக்காக 2005-06 இ‌ல ் ரூ.1,817 கோடியும், 2006-07 இ‌ல் ரூ.2,530 கோடியும், 2007-08 இ‌ல ் ரூ.6,483 கோடியும், 2008-09 இ‌ல ் ரூ.7,600 கோடியும் ஒதுக்கப்பட்டது எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments