Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்க‌ள் கல்வி உதவித்தொகை பெ‌ற ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க இ‌ன்று கடை‌சிநா‌ள்!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (12:32 IST)
தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் சிறுபா‌ன்மை‌யி ன மாணவர் க‌ ள ் கல்வி உதவித்தொக ை பெ‌ ற ‌ வி‌ண்ண‌ப்‌பி‌க் க இ‌ன்ற ு கடை‌சிநா‌ள் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது தொடர்பாக ‌ விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌‌ர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், " மத்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை தமிழகத்தில் 2007-08 ஆ‌ம ் ஆண்டு முதல் மாண வ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் உதவித் தொகை பெற்றவர்கள் மற்றும் இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் புதியதாக விண்ணப்பங்களை சமர்பிக்க விரும்பும் மாண வ, மாணவிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் விரிவாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008-09 ஆ‌ம் ஆண்டில் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வேண்டி முதல்முறையாக விண்ணப்பிப்போர் தங்களது விண்ணப்பங்களை அமைந்த படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து ஆக‌ஸ்‌ட் 31ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போத ு, இக்கால வரையறை இன்று (15.10.08) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தங்களது முழு பாதுகாப்பில் வைத்துக்கொண்டு மாணவ, மாணவிகளின் ஒருங்கிணைந்த பட்டியலை உரிய படிவத்தில் அ‌க்டோப‌ர் 20ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வேண்டி முதல்முறையாக விண்ணப் பிக்கும் மாணவ, மாணவிகள் 12ஆ‌ம் வகுப்பு அல்லது தொழில் பட்டப்படிப்புகளில் இறுதித்தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர் தான் சிறுபான்மையினத்தை சார்ந்தவர் என்பதற்கான சாதி பற்றிய விவரம் ரூ.10 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் எழுதி பெற்றோர் அல்லது பாதுகாவலரால் உறுதிமொழி சுய கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றி தழில் சான்றுறுதி அலுவலர் கையொப்பம் பெற வேண்டியதில்லை. மற்றும் வருவாய் அலுவலரின் சான்றும் இணைக்க வேண்டியதில்லை.

பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் குறித்த உறுதிமொழி ரூ.10 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் சுய கையொப்பமிட்டு அளித்தால் போதுமானத ு" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments