Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ணி‌‌னி ஆசிரியர் தேர்வு எழுத அனுமதி : உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (14:13 IST)
க‌ணி‌னி ஆசிரியர் பணி நியமனத்திற்கான சிறப்பு தேர்வு எழுதுவதற்கு 10 பேரை அனுமதிக்க வேண்டும் என்று செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உத்தரவிட்டுள்ளது.

த‌ ர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உள்பட 10 பேர் சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் தாக்கல் செய்து‌ள் ள மனு‌வி‌ல ், நாங்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் க‌ணி‌ன ி ஆசிரியர்களாக 1999ஆ‌ம ் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறோம்.

எங்களை பணி நிரந்தரம் செய்யும் வகையில் 1,850 க‌ணி‌ன ி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவும், சிறப்பு தேர்வு நடத்தவும் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பி.எட். படித்த க‌ணி‌ன ி ஆசிரியர்கள் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ‌நீ‌திம‌ன்ற‌‌ம், அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன் ற கூடுத‌ல ் அம‌ர்வு, க‌ணி‌ன ி ஆசிரியர் பணி நியமனத்திற்கான சிறப்பு தேர்வை ஒருமுறை நடத்திக் கொள்ளலாம் என்றும் தேர்வு நடைமுறைகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

க‌ணி‌னி ஆசிரியர் பணி நியமனத்திற்கான சிறப்பு தேர்வு 12ஆ‌ம் தேதி நடக்கிறது. ஆனால், இந்தத் தேர்வுக்காக எங்களுக்கு நுழைவு‌ச ் ‌ சீ‌‌ட்ட ு கொடுக்க மறுத்துவிட்டனர். முதுகலை ப‌ட்ட ய படிப்பிற்கான சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறினார்கள். நாங்கள் பெரியார் பல்கலைக் கழகத்தில் முதுகலை ப‌ட்டய‌ம் பெற்றுள்ளோம். எங்களை சிறப்பு தேர்வு எழுத அனுமதிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்ற ு கூ‌‌றி‌யிரு‌ந்தன‌ர ்.

இந்த மனுவை ‌விசா‌ரி‌த் த நீதிபதி கண்ணன ், மனுதார‌ர ் ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேரை க‌ணி‌ன ி ஆசிரியர் பணி நியமனத்திற்கான சிறப்பு தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டும் எ‌ன்று‌ம ் ஆனால், தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என்ற ு‌ ம் உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

மொபைல் எண்ணை தெரிவித்து துப்பாக்கிபட பாணியில் ஐ ஆம் வெயிட்டிங் என கையில் லத்தியுடன் எஸ்.பி. வருண்குமார் அச்சத்தில் சமூக விரோதிகள்!

'வாழு.. வாழ விடு' - இதுல யாரையும் இழுத்துவிடாதீங்க..! விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி..!!

Show comments