Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 புதிய பாடம்: 'இக்னோ'வுடன் அப்பல்லோ கூட்டு!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (18:39 IST)
மருத்துவம் தொடர்பாக புதியதாக 45 பாடங்களை தொடங்க வகை செய்யும் ஒப்பந்தம் ஒன்றில் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் (இக்னோ), சென்னை அப்பல்லோ மருத்துவமனையும் கையெழுத்திட்டுள்ளன.

இதுகுறித்து அப்பல்லோ நிறுவத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அப்பல்லோ மருத்துவமனையின் 25-வது ஆண்டுக் கொண்டாட்டங்களை ஒட்டி, தொழில்நுட்பாளர், மருத்துவ உதவியாளர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம் சார்ந்த 45 புதிய பாடங்களை அப்பல்லோ அறிமுகம் செய்கிறது. இதனை இக்னோ ஏற்று நடத்தும். தொலைநிலைக் கல்வியை முறையைப் பின்பற்றி இவை இணையதளம் வாயிலாக நடத்தப்படும்.

முதலாவது பாடம் வரும் ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாடங்களின் கால அளவு 3 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை இருக்கும். இதற்கான கட்டணம் உள்ளிட்ட பிற விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

மொபைல் எண்ணை தெரிவித்து துப்பாக்கிபட பாணியில் ஐ ஆம் வெயிட்டிங் என கையில் லத்தியுடன் எஸ்.பி. வருண்குமார் அச்சத்தில் சமூக விரோதிகள்!

'வாழு.. வாழ விடு' - இதுல யாரையும் இழுத்துவிடாதீங்க..! விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி..!!

Show comments