Webdunia - Bharat's app for daily news and videos

Install App

+2, 10-ம் வகுப்பு சிறப்புத் தேர்வு எழுத வாய்ப்பு!

Webdunia
இம்மாதம் நடைபெற உள்ள +2, 10 ஆம் தேர்வுக்கு விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ரூ. 1,000 செலுத்தி தேர்வெழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் படித்து தேர்ச்சி பெறாதவர்கள், தனியாகப் படித்து தேர்வு எழுதுபவர்கள் தற்போது நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் பயன்பெறும் நோக்கத்துடன் தற்போது கூடுதல் கட்டணத்துடன் விண்ணப்பிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் வரும் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சென்னை இயக்குநரகத்திலும், நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

தேர்வுக் கட்டணம் மற்றும் கூடுதலாக ரூ. 1,000 ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 18 ஆம் தேதிக்குள் அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

இதேபோல் மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் ரூ. 500 ஐ செலுத்தி சிறப்புத் திட்டத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

Show comments