Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை: நல்லாசிரியர் விருதுகள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (15:59 IST)
புதுச்சேரி மாநிலத்தில் 2007- 08 ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுகளை முதலமைச்சர் வைத்திலிங்கம் இன்று அறிவித்துள்ளார்.

இதன்படி, தொடக்க பள்ளி அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு டி. ராமலிங்கம் (அரியாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி), டி. தனுசு (தலைமையாரிசிரியர், சைதாரப்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

டி. குணசேகரன் (குருவெளிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி), ஏ.அலி, (ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால்) ஆகியோர் நடுநிலைப் பள்ளிகள் அளவில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

தேங்காய்த்திட்டு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் வி. ஜெயபாலன், முதலமைச்சரின் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகளிர் ஆசிரியர்கள் பிரிவில் இதே விருதுக்கு ஜே. பார்வதி, மங்கையர்கரசி, செல்வநாயகி, மார்கரெட் அம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

காரைக்கால் அம்பகரத்தூர் பள்ளியின் கைவினைத்தொழில் ஆசிரியர் முத்துகுமார் என்பவரும் முதலமைச்சரின் சிறப்பு விருதை பெறுகிறார்.

கல்வித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் வைத்திலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments