Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து ஐ.ஐ.டி 2008 உலகக் கருத்தரங்கு சென்னையில்!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (13:15 IST)
சென்னை: அனைத்து ஐ.ஐ.டி என்ற 7 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் தொகுதி அமைப்பு, டிசம்பர் 19ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உலகக் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த கருத்தரங்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெறுவதாக அது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த உலகக் கருத்தரங்கில் ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்களை ஒன்று சேர்த்து, கொள்கை வகுப்பாளர்கள், முன்னணி கல்வியியளாளர்கள், சிந்தனை முன்னோடிகள், தொழிற்துறை தலைவர்கள் ஆகியோரை உலக அளவில் ஒன்று சேர்த்து கருத்துக்கள் குறித்த விவாதம், எதிர்கால இந்தியாவை உருவாக்க தீர்வுகளையும், விவகாரங்களையும் பரீசிலிக்க திட்டமிட்டுள்ளது.

தொடர்ச்சியாக 5-வது முறையாக நடத்தப்படும் இந்த உலக கருத்தரங்கில் இம்முறை மிட்டல் ஸ்டேல் நிறுவனர் எல்.என்.மிட்டல், நிச்சான் நிறுவனத்தின் இணைத்தலைவர், தலைவர் மற்றும் தலைமைச ் செயலதிகாரியான கார்லோஸ் கோஸன், புரோக்டர் அன்ட் காம்பிள் தலைமை செயல்முறைத் தலைவர் பாப் மெக்டொனால்ட், மிச்சிகன் பல்கலைக்கழக வர்த்தகத்துறை பேராசிரியர் சி.கே.பிரஹலாத், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அமெரிக்காவில் புரூக்ளின் கல்வி நிறுவனத்தில் அயலுறவுக் கொள்கைப் பிரிவின் மூத்த ஆய்வாளர் ஸ்டீபன் கோஹென் ஆகிய முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

இவர்களுடன் மேலும் சில சிந்தனை முன்னோடிகளும் பங்குபெற்று, புதிய சிந்தனை, தொழில் நுட்பம் ஆகியவற்றின் எல்லைகள், அடுத்ததாக உலகத்தை புரட்டும் மிகப்பெரிய சக்திகள் மற்றும் போக்குகள், சிந்தனைகள் ஆகியவற்றை அலசி ஆராயவுள்ளனர்.

இது குறித்து அனைத்து ஐ.ஐ.டி 2008 அமைப்பின் தலைவரும், செயின்ட் கோபெய்ன் கிளாஸ் நிறுவனத்தின் தலைவருமான சந்தானம் கூறுகையில், "இந்த முறை நாங்கள் ஒரு பரந்துபட்ட ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ளோம், இதில் பங்குபெறும் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் கல்வித்துறையை சார்ந்தவர்கள் ஆகியோர், தற்போதைய நிலவரங்களை தங்களது ஆழமான பார்வைக்கு உட்படுத்துகின்றனர்" என்றார்.

இந்த உலகக் கருத்தரங்கின் அறிவுத்துறை கூட்டாளியாக இருக்கும் மெக்கின்ஸி அன்ட் கம்பெனி இந்த நிகழ்ச்சியின் பொருளடக்கங்களை வழங்குகின்றனர். கூகுள், டாடா குழுமம், மற்றும் இந்திய ஸ்டேட் வங்கி ஆகியோர் இந்த கருத்தரங்கின் கோல்டு ஸ்பான்சர்களாக திகழ்வர்.

அனைத்து ஐ.ஐ.டி. அமைப்பின் திட்டங்களுக்கு கூகுள் தனது அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 5 மிகப்பெரிய தேசக்கட்டுமான திட்டங்களை வழி நடத்தி வருகிறது இந்த அமைப்பு. ஐ.ஐ.டி,க்காக ஐ.டி.ஐ.க்காக ஐ.ஐ.டி.யாளர்கள், இது நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் தொழில் நுட்ப கல்விகளை வழங்கி வருகிறது.

இரண்டாவது, பொறியியியல் கல்விக்கான இந்திய-அமெரிக்க கூட்டிணைவு.

மூன்றாவது, கவனிப்பாரற்ற குழந்தைகளின் வாழ்க்கையை மற்றியமைக்கும் பரிக்கிரமா.

நான்காவது, கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் ரீச்4 இந்தியா.

ஐந்தாவது, கல்வியை ஊக்குவித்து வளர்ச்சியை மேம்படுத்துதல் என்ற பொருளாதார வளர்ச்சிக்கான ஈ-லேர்னிங்.

இந்த 5 மிகப்பெரிய தேசக்கட்டுமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது அனைத்து ஐ.ஐ.டி. அமைப்பு.

இந்த கருத்தரங்கத்திற்கான பதிவுகளை paniit2008 இணையதளத்தில் செய்து கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments