Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கான கல‌ந்தா‌ய்வு: 18ஆ‌ம் தேதி தொட‌க்க‌ம்!

Webdunia
சனி, 16 ஆகஸ்ட் 2008 (12:12 IST)
2008-09 ஆ‌ம் கல்வி ஆண்டுக்கான சித்த மருத்துவம், ஓமியோபதி, இயற்கை மருத்துவம், யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கான கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 18ஆ‌ம் தேதி தொடங்குகிறது எ‌ன்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி சிறப்பு ஆணையர் அலுவலகம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுதொடர்பாக வெளியிட‌ப்ப‌ட்டு‌ள்ள செய்திக்குறிப்பில், "2008-2009ஆ‌ம் கல்வி ஆண்டுக்கான சித்த மருத்துவம், ஓமியோபதி, இயற்கை மருத்துவம், யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கான கல‌ந்தா‌‌ய்வு 18ஆ‌ம் தேதி தொடங்குகிறது. சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தில் காலை 10 மணிக்கு கல‌ந்தா‌ய்வு நடைபெறும்.

முதல் நாள் காலை சிறப்பு வகுப்பினர் மற்றும் கட் ஆப் மார்க் 194.75 முதல் 178 வரையுள்ளவர்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு 177.75 முதல் 158 மார்க் உடையவர்களுக்கும் கல‌ந்தா‌ய்வு நடத்தப்படும். 157.75 முதல் 143 வரை கட் ஆப் மார்க் உள்ளவர்களுக்கு 19ஆ‌ம் தேதி காலையும், 142.75 முதல் 125 மார்க் வரை உடையவர்களுக்கு பிற்பகலும் கல‌ந்தா‌ய்வு நடக்கும். 20ஆ‌ம் தேதி காலை கட் ஆப் மார்க் 124.50 முதல் 78.75 வரை உடையவர்களுக்கு கல‌ந்தா‌ய்வு நடத்தப்படும்.

காலை நேர கல‌ந்தா‌ய்‌வி‌ற்கு வரவேண்டியவர்கள் 9 மணிக்கும், பிற்பகல் வரவேண்டியவர்கள் மதியம் 1 மணிக்கும் கல‌ந்தா‌ய்வு கூடத்தில் இருக்க வேண்டும். கல‌ந்தா‌ய்‌வி‌ற்கு வரும்போது அனைத்து கல்விச்சான்றிதழ்களையும் எடுத்தவர வேண்டும்.

கல‌ந்தா‌ய்வு பற்றிய அழைப்புக்கடிதம் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் உரிய கட் ஆப் மார்க் இருந்தால் மேலே குறிப்பிடப்பட்ட அட்டவணைப்படி கல‌ந்தா‌ய்‌வி‌ல் கலந்து கொள்ளலாம்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments