Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌வி‌ல் ‌‌நீ‌திப‌தி தே‌ர்வு‌‌க்கு எ‌திரான மனு த‌ள்ளுபடி!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (11:32 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான எழுத்த ு‌ த் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ன ் மன ு த‌ள்ளுபட ி செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

‌ திருத்தணியை சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் ஜி.கமலக்கண்ணன் எ‌ன்பவ‌ர் சென்னை உய‌ர ் ‌‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்து‌‌ள்ள மனுவில ், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 38 உதவி வழ‌க்க‌றிஞ‌ர்களை‌த ் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்களை வரவேற்றது. இந்த பதவிக்கான எழுத்து தேர்வு வரும் 3ஆ‌ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியில் இருந்து 4 மணி வரை நடக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் 201 சிவில் நீதிபதிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்றது. இந்த பதவிக்கும் நான் விண்ணப்பித்துள்ளேன். இதற்கான எழுத்து தேர்வுகள் கடந்த மே மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடப்பதாக இருந்தது.

பின்னர், இந்த தேர்வு தள்ளிவைக்கப் ப‌ ட்ட ு இத‌ன் எழுத்து தேர்வு வரும் 2ஆ‌ம் தேதி சனிக்கிழமையும், 3ஆ‌ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணி வரையும் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 பதவிகளுக்கும் கல்வித் தகுதி ஒன்றுதான். 2 பதவிகளுக்கான தேர்வ ு‌ ம் ஞாயிற்றுக்கிழமைய‌ன்று ஒர ே நா‌ளி‌‌ல ் நடத்தப்படுவதால், நான் பாதிக்கப்பட உள்ளேன். ஆகவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்து தேர்வை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும். 2, 3 ஆ‌ம் தேதிகளில் அந்த எழுத்து தேர்வை நடத்த தடை விதிக்க வேண்ட ு‌ ம ் எ‌ன்ற ு மனுவில் கூறி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த வழ‌‌க்‌கி‌ன் ‌விசாரணை ‌நீ‌திப‌திக‌ள் முகோபா‌த்‌தியா, தனபா‌ல் மு‌‌ன்‌னிலை‌யி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌திக‌ள் இ‌‌ந்த மனுவை த‌ள்ளுபடி செ‌ய்து ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நி‌ர்ண‌யி‌த்த கால அ‌ட்டவணை‌யி‌ன்படி இ‌த்தேர்வு நடைபெறு‌கிறது. இத‌ற்கான அ‌றி‌வி‌ப்‌‌பி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ம் தலை‌யிட முடியாது எ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌ர்‌ப்‌‌பி‌ல் கூ‌‌றின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Show comments