Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை இல்லாதோருக்கு உதவித்தொகை: ஆ‌ட்‌சிய‌ர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (13:27 IST)
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ ் 2, பட்டப் படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌ம் அரசு உதவித்தொகை‌ப்பெற ‌வி‌‌‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம் எ‌ன செ‌ன்னை மாவ‌ட்ட ஆ‌‌ட்‌சிய‌ர் கா‌க‌ர்லா உஷா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ ் 2, பட்டப் படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.

இதற்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து (30.6.2008 தேதிப்படி) 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்கவு‌ம் வேண்டும்.

வயது 40-க்கு மிகாமல் இரு‌க்க வே‌ண்டு‌ம். தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌யின வகுப்பினராக இருந்தால் வயது வரம்பு 45 ஆகு‌ம். தற்போது அரசு அல்லது தனியார் துறையில் ப‌ணிபு‌ரி‌ந்து‌க் கொ‌ண்டு இருக்கக் கூடாது. சென்னை மாவட்டத்தில் மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவ‌ர்க‌ள் ஓராண்டு முடிந்துவிட்டால் சுயஉறுதிமொழி ஆவணத்தை தங்கள் பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விவரங்களுடன் உடனடியாக நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எ‌ன்று சென்னை மாவட்ட ஆ‌ட்‌‌சி‌ய‌ர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

Show comments