Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌‌ளிநாடு செ‌ல்லு‌ம் மாணவர்களு‌க்கு ஏர் இந்தியா சலுகை!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (15:23 IST)
இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அய‌ல்நாடு செல்லும் மாணவர்களுக்கு சுமைகளை எடு‌த்து‌ச் செல்வ‌தி‌ல் ஏர் இந்தியா சலுகை அ‌ளி‌த்து‌ள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டு‌ள்ள அறிவிப்பில், இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அய‌ல்நாடு செல்லும் மாணவர்களுக்கு சுமைகளை கொண்டு செல்வதில் அக்டோபர் 31ஆ‌ம் தேதி வரை சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு, மாணவர்கள் கடவு‌ச்‌சீ‌ட்டு (‌விசா) வைத்திருக்க வேண்டும்.

ஏர் இந்தியா விமானத்தின் மூலம் பிராங்புட், பாரீஸ், லண்டன், பர்மின்ங்காம் ஆகிய இடங்களுக்குச் சென்றாலோ அல்லது பிராங்புட், பாரீஸ், லண்டன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றாலோ ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சுமை எடையுடன் 20 கிலோ கூடுதலாக, கட்டணமில்லாமல் (மொத்தம் 40 கிலோ) எடுத்துச் செல்லலாம்.

இந்தியாவில் இருந்து அய‌ல்நாடுகளுக்கு ஐ.சி. விமானங்களில் சென்று அங்கிருந்து அதே டிக்கெட்டில் ஏர் இந்தியா விமானத்தில் ஐரோப்பா நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களும் இந்த சலுகையைப் பெறலாம்.

இந்தியன் ஏர் லைன்ஸ், ஏர் இந்தியா விமானங்கள் மூலம் சிங்கப்பூர், சீனா, நியூ‌ஸீலாந்து, செல்லும் மாணவர்கள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள சுமைகளை கட்டணமின்றி கொண்டு செல்லலாம். ஆஸ்‌ட்ரேலியாவுக்கு செல்கிறவர்கள் (ஒரு வழிப் பயணம்) 50 கிலோ சுமைகளை எடுத்துச் செல்லலாம்.

அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் செல்லும் மாணவர்கள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சுமைக‌ள் எண்ணிக்கையோடு கட்டணமின்றி கூடுதலாக 23 கிலோ கொண்ட ஒரு சுமையை கொண்டு செல்லலாம். இவர்கள் 2009ஆ‌ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த சலுகையைப் பெறலாம் எ‌ன்று கூறப்பட்டு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments