Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திராகாந்தி பல்கலை.யில் புதிய பட்டப்படிப்பு

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (12:42 IST)
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமான இக்னோ ( IGNOU), விழிப்பார்வை தேர்வாய்வு மற்றும் விழிசார்ந்த தொழில் நுட்பங்களுக்கான புதிய இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை இந்த ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களைப் பகுதிப் பாடங்களாகக் கொண்டு, கல்விப் பயிற்சி பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்களை சென்னையில் உள்ள இக்னோ நேரடி மையத்தில் 100 ரூபாய் செலுத்தி பெறலாம். தபாலில் பெற 150 ரூபாய் வரைவோலை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக் இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments