Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (12:37 IST)
இந்திய ஆ‌ட்‌சிப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.

இது குறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல், வரு‌ம் 2009 மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரு‌ம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.

முத‌ல் ‌நிலை‌த் தே‌ர்வு‌ எழுத ‌விரு‌ம்புபவ‌ர்களு‌க்கு ஏழு மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்தை ரூ.100 செலுத்தி சென்னையில் உள்ள பெரியார் திடலில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

தபாலில் பெற விரும்புபவர்கள் செயலாளர், பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையம் என்ற பெயரில் வரைவோலை (டி.டி) எடுத்து ரூ.10 அஞ்சல் தலை வைத்து இயக்குநருக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஜூலை 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் விவரங்க‌ள் அ‌றிய,
பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மைய‌ம்,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7.
044-26618056, 26618161 எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் அணுகலா‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments