Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண‌‌ம் மா‌ற்ற‌மி‌ல்லை

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (10:42 IST)
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்ல ை. கட‌ந்த ஆ‌ண்டு க‌ல்‌வி‌க் க‌ட்டணமே ‌நீடி‌க்கு‌ம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளுக்கும் சுயநிதி மருத்துவ கல்லூரிக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் குழ ு அமைக்கப்பட்டது. அந்த குழு, பொ‌றி‌யிய‌ல ் கல்வி கட்டணத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை என்று அறிவித்தது. நிர்வாக ஒதுக்கீட்டில் சேரப்போகும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 500 என்று நிர்ணயித்துள்ளது.

சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணம் குறித்து தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில ், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது சம்பந்தமாக நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு சென்ற கல்வி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கீழ்கண்ட கல்வி கட்டணத்தையே எவ்வித மாற்றமும் இன்றி 2008-09-ம் நிதியாண்டிலும் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும்.

மேலு‌ம்,

செட்டிநாடு மருத்துவக்கல்லூரி படூர், காஞ்சீபுரம் மாவட் ட‌ம் : ரூ.3 லட்சம். ஏழை மாணவர்களுக்கு இந்த கட்டணத்தில் 15 சதவீதம் சலுகை அளித்திட குழு பரிந்துரை செய்துள்ளது. பி.எஸ்.ஜி.மருத்துவக்கல்லூரி, கோவை : ரூ.2 லட்சத்து 25 ஆயிரம்.

மூகாம்பிகை மருத்துவக்கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம ் : :ர ூ. 2 லட்சத்து 40 ஆயிரம்.

இந்த தகவலை அரசு சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments