Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆ‌ம் வகுப்பு சிறப்புத் தேர்வு: விண்ணப்பிக்க 24ஆம் தேதி கடைசி!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (13:18 IST)
ஜூலையில் நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு உடனடி அனுமதி திட்ட சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 24ஆம் தேதி கடைசி நாளாகும். அதிகபட்சமாக 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே உடனடி அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உரிய தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 சிறப்பு ஒதுக்கீட்டுக் கட்டணத்தை, "அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6' என்ற பெயரில் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.

10 ஆ‌ம ் வகு‌ப்ப ு மாணவர்களுக்கு ஒன்று முதல் மூன்று பாடங்களுக்கான கட்டணம் ரூ.625. மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 635ம், இரு பாடங்களுக்கு ரூ.735ம், 3 பாடங்களுக்கு ரூ.835ம் செலுத்த வேண்டும்.

ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.585ம், இரு பாடங்களுக்கு ரூ.635ம், 3 பாடங்களுக்கு ரூ. 685ம் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 24ஆம் தேதிக்குள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம், மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, கடலூர், வேலூர் மண்டல அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

Show comments