Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ஸ்.ஆ‌ர்.எ‌ம். ப‌ல்கலை.‌யி‌ல் பொ‌றி‌யிய‌ல் கவு‌ன்‌சி‌லி‌‌‌‌ங்!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (18:07 IST)
செ‌ன்னை எ‌ஸ்.எ‌‌ம்.ஆ‌ர். ப‌ல்கலை‌‌க்க‌ழக‌த்‌தி‌ல் பொ‌‌றி‌யிய‌ல் படி‌ப்‌பி‌ல் சே‌ர்வத‌ற்கான கவு‌ன்‌சி‌‌லி‌ங் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது. 1759 இட‌த்து‌க்கு இ‌ன்று கவு‌ன்‌சி‌லி‌ங் நட‌ந்தது.

எ‌ஸ்.ஆ‌ர்.எ‌ம். இ‌ன்‌‌‌ஜி‌னிய‌ரி‌ங் நுழைவு‌த் தே‌ர்‌வி‌ல் முத‌ல் மூ‌ன்று இட‌த்தை வட மா‌நில‌த்‌தை சே‌ர்‌‌ந்த மாணவ‌ர்க‌ள் ‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

முத‌ல் இட‌‌த்தை ‌பீகாரை சே‌ர்‌ந்த அலோ‌க் ராஜ‌னு‌ம், இர‌ண்டாவது இட‌த்தை உ‌த்தர‌‌பிரதேச‌த்தை சே‌ர்‌ந்த அம‌ல் ‌பிரகா‌சு‌ம் ‌பிடி‌த்து‌ள்ளன‌ர் எ‌ன்று எ‌ஸ்.ஆ‌ர்.எ‌ம். ப‌ல்கலை‌க்கழக வே‌ந்த‌ர் ப‌ச்சமு‌த்து ம‌ற்று‌ம் துணைவ‌ே‌ந்த‌ர் ச‌த்‌தியநாராயண‌ன் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ம‌த்‌திய ‌பிர‌தேச‌த்தை சே‌ர்‌ந்த மாணவ‌‌ர் அலோ‌க் மூ‌ன்றாவது இட‌த்தை ‌பிடி‌த்து‌ள்ளா‌ர். இவ‌ர் பயோ- டெ‌க்னால‌ஜி படி‌ப்பை தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளா‌ர்.

வட மா‌நில‌த்தை சே‌ர்‌ந்த அ‌திகமான மாண‌‌வ‌ர்க‌ள் பயோ- டெ‌க்னால‌ஜி, பயோ-இ‌ன்பா‌ர்மேச‌ன் ஆ‌கிய பாட‌த்தை ‌விரு‌ப்‌பி‌யு‌ள்ளன‌ர். த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் தெ‌ன் மா‌நில‌த்தை சே‌ர்‌ந்த மாணவ‌ர்க‌ள் இ‌சிஇ, க‌ம்‌ப்யூ‌ட்ட‌ர் ச‌யி‌ன்‌ஸ், ஐ.டி பாட‌‌த்தை ‌விரு‌ம்‌பி ‌‌எடு‌த்து‌ள்ளன‌ர் எ‌ன்று துணைவே‌ந்த‌ர் ச‌த்‌தியநாராயண‌ன் கூ‌றினா‌ர்.

கட‌ந்த ஆ‌ண்டு இரு‌ந்த 2100 இட‌ங்க‌ளி‌ல் இ‌ந்த ஆ‌ண்டு கூடுதலாக 150 இட‌ங்க‌ள் பயோ-டெ‌க்னால‌ஜி, க‌ம்‌ப்யூ‌ட்ட‌ர் ச‌யி‌‌ன்‌ஸ், மெ‌ன்பொரு‌ள் பொ‌றி‌யிய‌ல், தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், டெ‌லிக‌ம்யூ‌னி‌கேஷ‌ன் உருவா‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

80 ‌ விழு‌க்காடு (1750 இ‌ட‌ங்க‌ள்) அரசு ஒது‌க்‌கீடு மூல‌ம் ‌நி‌ர‌ப்ப‌‌ப்படு‌கிறது. 20 வ‌ிழு‌க்காடு (350) இட‌ங்க‌ள் ‌நி‌‌ர்வாக ஒது‌க்‌கீடு மூல‌ம் ‌நிர‌ப்படு‌கிறது எ‌ன்று கூ‌றின‌ா‌ர் ச‌த்‌தியநாராயண‌ன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

Show comments