Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌னியா‌ர் பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரிகளு‌க்கான க‌ட்டண‌ங்க‌ள் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (16:53 IST)
வரு‌ம ் கல்வியாண்டில் தனியார் சுயநிதி பொறியியற் கல்லூரிகளில ், அரசு நடத்தும் ஒற்றை சாளர முறையில் ஒதுக்கீடு மற்றும் கல்லூரி நிர்வாகத்தால ் ச ெ‌ ய்யப்படும் மாணவர் சேர்க்கை மூலம் சேரு‌ம் மாணவர்கள ் செலுத்திட வேண்டிய ஆண்டுக் கல்வி கட்டணத்தை அரசு‌ ‌நி‌ர்ண‌யி‌த்து‌ள்ளது.

2008-2009- ஆம் கல்வியாண்டில் தனியார் சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் சே‌ர்‌க்கை பெறு‌ம் மாணவர்கள ் செலுத்திட வேண்டிய ஆண்டுக் கல்வி கட்டணத்தை நிர்ணயம் ச ெ‌ ய்வதற்காக, நீதிப‌த ி என்.வி. பாலசுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்றினை அரசு அமைத்தது.

அக்குழு சுயநிதி பொறியியற் கல்லூரிகளின் கூட்டமைப்பு, சுயநிதி பொறியியற் கல்லூரிகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோ‌ரிடமிருந்து கல்விக் கட்ட ண நிர்ணயம ் குறித்து கருத்துக்களை பெற்றது. மேலும், சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடமிருந்து வரவு செலவு கணக்குகள் மற்றும் அவர்கள் கோரும் கல்விக ் கட்டண விவரங்கள் ஆகியவற்றை அறிக்கை வாயிலாக பெற்றது.

அதனடிப்படையில், வரும் கல்வியாண்டில் அதாவது, 2008-2009-ஆம் ஆண்டில் தனியார் சுயநித ி பொறியியற் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் க ீ‌ ழ ் சேரும் மாணவர்கள ் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத் தொகையை இக்குழு நிர்ணயம ் ச ெ‌ ய்துள்ளது.

2008-2009- ஆம் கல்வியாண்டில் சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்த ா‌ ய்வில் கலந்து கொண்டு ஒதுக்கீடு பெற்று சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு செலுத்திய கல்விக் கட்டணமே இவ்வாண்டும் தொடரும்.

சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்த ா‌ ய்வு மூலம் இல்லாமல் பிற வகைகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.62,500/- கல்விக் கட்டணம் நீதிப‌த ி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு நிர்ணயம் ச ெ‌‌ ய்துள்ளது.

மாணவர் சேர்க்கை முறை கல்விக் கட்டணம்

அரசின் சார்பாக அண்ணா பல்கலைக் கழகம்,
சென்னை ஒற்றைச் சாளர கலந்த ா‌ ய்வு மூலம் சுயநிதி
பொறியியற் கல்லூரிகளின் சேர்க்கை பெறும்
மாணவர்களுக்கு (ஆண்டொன்றுக்கு)

1) தரச் சான்று பெறாத பாடப் பிரிவுகளுக்கு ரூ.32,500/-
( Non- Accredited courses)

2) தரச் சான்று பெற்ற பாடப் பிரிவுகளுக்கு
( Accredited courses) ரூ.40,000/-

அண்ணா பல்கலைக் கழக ஒற்றைச் சாளர கலந்தா‌ய்வு
மூலம் இல்லாமல் பிறவகைகளில் சுயநிதி பொறியியற்
கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு
( ஆண்டொன்றுக்கு) ரூ.62,500/-

சுயநிதி பொறியியற் கல்லூரிகளிலுள்ள மாணவர்கள் சேர்க்க ை இடங்களை அரசு மற்றும் கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு இடங்களாக முறைய ே சிறுபான்மையின‌ர ் அல்லாத பொறியியற் கல்லூரிகள் 65:35 என்ற விகிதத்திலும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பொறியியற் கல்லூரிகள் 50:50 என்ற விகிதத்திலும் நிரப்பிக்கொள்ளத்தக்க வகையில் தங்களுடைய உடன்பாட்டினை கல்லூரிகளின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

Show comments