Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 3 முத‌ல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. விண்ணப்பங்கள்

Webdunia
வியாழன், 29 மே 2008 (13:11 IST)
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆ‌கிய ப‌ட்ட மே‌ற்படி‌ப்புக‌ள் படிக்க விண்ணப்ப படிவங்கள் ஜூன் 3-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. மாணா‌க்க‌ர்க‌ள் பூ‌ர்‌த்‌தி செ‌ய்யத ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்களை விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாளாகு‌ம்.

அரசு பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசுக்கு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்ப படிவங்கள் ஜூன் 3-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

‌ வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் சென்னையில் மத்திய பாலிடெக்னிக், மாநில கல்லூரி, கோவை அரசு தொழில்ட்ப கல்லூரி, திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி, ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து தொழில் நுட்ப நிறுவனம், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் கலைக்கல்லூரி, நாகர்கோவில் இந்து கல்லூரி, பர்கூர், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அரசு பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள், மதுரை தியாகராஜர் பொ‌றி‌யிய‌ல் கல்லூரி, மயிலாடுதுறை தருமாபுரம் ஞானாம்பிகை அரசு பெண்கள் கலைக்கல்லூரி, கும்பக்கோணம், பரமக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஊட்டி, கரூர், கடலூர், அரியலூர், கோவை, திருவாரூர் அரசு கலைக்கல்லூரிகள் ஆகியவற்றிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

பெரம்பலூர் தந்தை ரோவர் பாலிடெக்னிக், புதுக்கோட்டை மாமன்னர் ஆண்கள் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொ‌றி‌யிய‌ல் கல்லூரி, தேனி உடையப்பா பொ‌றி‌யிய‌ல் கல்லூரி, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்ட்ப கல்லூரி, விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் ஆகியவற்றிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

த‌மிழக‌ம் முழுவது‌ம் மொ‌த்த‌ம் 34 கல்வி நிறுவனங்களில் ‌வி‌ண்ண‌ப்ப‌ப் படிவ‌ங்க‌ள் வழ‌ங்க ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்‌க‌ள் 18-ந் தேதிக்குள் கிடைக்கும்படி செயலாளர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை 2008, ஜி.சி.டி., கோவை-641013 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த தகவலை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி ஆணையம ் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments