Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாத‌ம் பகுதி நேர பி.இ. படிப்பு தொட‌க்க‌ம்: ஏ‌ப்ர‌லி‌ல் விண்ணப்பம்!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (12:25 IST)
பாலிடெக்னிக் முடித்தவர்கள் சேர்ந்து படிக்கும் பகுதி நேர பி.இ. படிப்பை இந்த ஆண்டு மே மாதமே தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏ‌ப்ர‌ல் மாதம் வழங்கப்பட உள்ளத ு.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, சேலம், கோவை, வேலூர், பர்கூர் ஆகிய இடங்களில் அரசு பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 1,900 இட‌‌ங்க‌ள் உள்ளன. அரசு பொ‌றி‌‌யிய‌ல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் பொ‌றி‌‌யிய‌ல் கல்லூரிகளில் உள்ள இடங்களும், தனியார் சுயநிதி பொ‌றி‌‌யிய‌ல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) மூலம் நிரப்பப்படுகின்றன.

பிளஸ்2 முடித்த மாணவர்கள் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கப்படுகிறார்கள். படிப்புக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். ஆனால், பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் `லேட்ரல் என்ட்ரி' முறையில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேருவார்கள். இதேபோல், பாலிடெக்னிக் முடித்து பணியில் இருப்பவர்கள் படிக்க வசதியாக பகுதி நேரமாக பி.இ. படிக்கும் முறையும் இருந்து வருகிறது.

பகுதி நேர பி.இ. படிப்பில் சேருவதற்கு பாலிடெக்னிக் முடித்து 2 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும். டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ ஆண்டுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வுசெய்யப்படுவோர் வேலையில் இருந்துகொண்டே பி.இ. படிப்பை முடித்துவிடலாம்.

அரசு பொ‌றி‌‌யிய‌ல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு மொத்தம் 1,446 இடங்கள் உள்ளன. வழக்கமாக டிசம்பர் மாதத்தில்தான் இந்த படிப்பு தொடங்கப்படும். நடப்பு கல்வி ஆண்டில் பொதுவான பி.இ. படிப்புடன் சேர்த்து மே மாதமே பகுதிநேர பி.இ. படிப்பையும் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏ‌ப்ர‌‌ல் மாதம் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments