Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு 23ஆ‌ம் தேதி வெளியீடு!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (11:39 IST)
இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு மா‌‌ர்‌ச் 23ஆ‌ம் தேதி வெளியிடப்படுகிறது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மா‌ர்‌ச் 28ஆ‌ம் தேதி கடைசிநாள் ஆகு‌ம்.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல், 2007 ஆம் ஆண்டு அக்டோ ப‌ரி‌ல் நடந்த ஆசிரியர் கல்வி பட்டய இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய பள்ளி மாணவ-மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும் தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் மா‌ர்‌ச் 23ஆ‌ம் தேதி பெற்றுக்கொள்ளலாம்.

சான்றிதழ் பெற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் மறுகூட்டல் கேட்டு விரும்பினால் மா‌ர்‌ச் 24ஆ‌ம் தேதி முதல் 28 ஆ‌ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே விண்ணப்ப படிவங்களை 28 ஆ‌ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

Show comments